Posts

அதிரடி பொடி ( இட்லி , தோசை )

Image
தேவையான பொருட்கள் : 1. உளுந்து -- 100 g 2. கடலைப் பருப்பு -- 50 g 3.  உப்பு -- தேவையான அளவு 4. துவரம்பருப்பு -- 50 g                                                           ( உங்கள் விருப்பம் ) 5. கொள்ளு -- 25 g                                                                      ( உங்கள் விருப்பம் ) 6. மிளகாய் காய்ந்தது -- 10-15 ( தேவைக்கேற்ப ) 7. பெருங்காயம் -- 1 மேசைக்கரண்டி 8.  சிறிது நல்லெண்ணெய் 9.  கறிவேப்பிலை -- 1 பிடி 10. பூண்டு --  3 பல்                                              ...

படையாக அடை (தோசை)

Image
தேவைப்படும் பொருட்கள் : 1. புழுங்கல் அரிசி --150 g 2. சிறு தானிய வகை ( கம்பு, தினை, வரகு, குதிரை வாலி ஏதேனும் ஒன்று ) -- 150 g 3. உளுந்து -- 100 g 4. கடலைப்பருப்பு -- 50 g 5. துவரம்பருப்பு -- 50 g 6. பாசிப்பருப்பு -- 50 g 7.வெங்காயம் -- 100 g ( வெட்டிக் கொள்ளவும் ) 8. மல்லித்தழை ( வெட்டிக் கொள்ளவும் ) 9. கறிவேப்பிலை  ( தூள் செய்யவும் ) 10.காய்ந்த மிளகாய்  ( தூள் செய்யவும் ) 11.சோம்பு -- 1 மேசைக்கரண்டி ( தூள் செய்யவும் )  படிமுறைகள் : 1. பருப்பு அரிசி வகைகளை முக்கால் மணி நேரம் ஊறவைக்கவும். பின் அதனை மாவாக அரைக்க வேண்டும். 2. வெட்டிய வெங்காயத்தை வதக்க வேண்டும். 3. அந்த மாவில் வதக்கிய வெங்காயம், வெட்டிய மல்லித்தழை , தூள் செய்த காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 4.  ருசிக்கு உப்பு சேர்க்க வேண்டும். 5. இட்டிலி மாவு பதத்திற்கு வைத்துக்கொண்டு அடையாக ஊற்றவும். எண்ணெய் ஊற்றி வெந்தவுடன் எடுக்கவும்.  குறிப்பு : மல்லித்தழையை தவிர்த்து முருங்கைக் கீரை, தூதுவளை ...

கருணை கிழங்கு மசியல்

Image
தேவைப்படும் பொருட்கள் : 1. கருணை கிழங்கு -- 300 g 2. வெங்காயம் -- 1பெரியது 3.  பூண்டு --  5 பல் 4. காய்ந்த மிளகாய் 3 5.  புளி -- சிறிதளவு 6. தக்காளி -- 1 7. கறிவேப்பிலை -- 10 8. கடுகு -- அரை தேக்கரண்டி 9. உளுந்து -- 1 தேக்கரண்டி 10. பெருங்காயத்தூள் -- அரை தேக்கரண்டி 11.எண்ணெய் -- 2 குழிக்கரண்டி 12. மஞ்சள் தூள் -- அரை தேக்கரண்டி படிமுறைகள் : 1. கிழங்கை அவித்து தோலை உரித்து வைத்து மசித்து ( பிணைந்து ) வைக்கவும். 2. சிறிது உப்பு போட்டு புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும். 3. முதலில் எண்ணெய் 2 குழிக்கரண்டிகள் போட்டு , பிறகு ஒவ்வொன்றாக கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட வேண்டும். 4. எல்லாம் போட்டு வதக்கியவுடன் இறுதியாக புளி சேர்த்து மசித்து வைத்திருந்த கருணைக்கிழங்கை வேண்டும் . தேவைப்பட்டால் எண்ணெய் ஊற்ற வேண்டும்  5. சட்டியில் கருணைக்கிழங்கு ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். இனி மசியலை ருசிக்கலாம் !!!!!...

10 நிமிடத்தில் பலவகை துவையல்

Image
இந்தப் பதிவில் துவையல் சிறிது நேரத்தில் எப்படி செய்வது இன்று பார்ப்போம் . உதாரணத்திற்கு முதலில் வல்லாரை துவையல் செய்வோம். தேவைப்படும் பொருட்கள் : 1.கடுகு ------தேக்கரண்டி 2. உளுந்து------1 மேசைக்கரண்டி 3.பெருங்காயத்தூள்-------1/2 தேக்கரண்டி 4. பூண்டு-----4 பல் 5. பெரிய வெங்காயம்-------எலுமிச்சம்பழம் அளவு 6. மிளகாய் ( பச்சை/ சிவப்பு/ காய்ந்தது )-----2/3 7. புளி------எலுமிச்சம் பழத்தின் பாதி அளவு 8. இஞ்சி-----1 cm 9.  வல்லாரை -----கைப்பிடி அளவு 10. உப்பு---- தேவையான அளவு 11. தேங்காய் பூ----- 35 gram   /   கடலை பருப்பு 12. எண்ணெய்-----1 மேசைக்கரண்டி படிமுறைகள் : 1. முதலில் கடுகு உளுந்து மற்றும் பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும். 2. அடுத்தது ஒவ்வொன்றாக பூண்டு , வெங்காயம்,  மிளகாய் மற்றும் இஞ்சியைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். 3. வல்லாரையை போட்டு வதக்கி சிறிது உப்பு சேர்க்கவும் 4. இறுதியாக தேங்காய் பூ சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். தேங்காய் பூ வேண்டாதவர்கள...

புதிய இரும்பு தோசை கல்லை பழக்குவது எப்படி ?

Image
தேவைப்படும் பொருட்கள் : 1. வடிக்கஞ்சி 2. தேங்காய் பூ 3. முட்டை 4. நல்லெண்ணெய் A. 1  படி ( Step ) 1. புதிய இரும்பு தோசை கல்லை ஒருநாள் முழுவதும் வடிகஞ்சியில் முக்கி வைத்திருக்க வேண்டும். 2. பின்பு தோசை கல்லை முன்னும் பின்னுமாக தேய்த்து சுத்தமாக கழுவ வேண்டும் இவ்வாறு 3 முறை புதிய வடிகஞ்சிகளில் ஒருநாள் முழுவதும் முக்கி வைத்திருந்து பின் சோப்பு போட்டு நாரால்  கழுவ வேண்டும். B. 2 படி 1. தோசை கல்லை மிதமான அடுப்பில் வைத்து தேங்காய் பூவை முழுவதுமாக பரப்பி வதக்க வேண்டும். ( சிவக்கும் வரை கருக்க கூடாது ) இவ்வாறு காலை மாலையாக 4 முறை செய்ய வேண்டும். தோசை கல்லை சோப்பு போடாமல் வெறும் நாரில் (scrub) தேய்த்து கழுவ வேண்டும் C. 3 படி 1. முட்டையை பரவலாக அடையாக ஊற்ற வேண்டும். 2. ஓரங்களில் சுற்றி சொட்டு சொட்டாக எண்ணெய் ஊற்றி முட்டையை திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இவ்வாறு 2 முறை செய்ய வேண்டும் பின் சோப்பை பயன்படுத்தி கையால் தேய்த்து கழுவ வேண்டும். முட்டை போட்டு சாப்பிடும் அளவிற்கு கல் தயாராகிவிட்டது /...