அதிரடி பொடி ( இட்லி , தோசை )




தேவையான பொருட்கள் :

1. உளுந்து -- 100 g
2. கடலைப் பருப்பு -- 50 g
3.  உப்பு -- தேவையான அளவு
4. துவரம்பருப்பு -- 50 g                                                           ( உங்கள் விருப்பம் )
5. கொள்ளு -- 25 g                                                                      ( உங்கள் விருப்பம் )
6. மிளகாய் காய்ந்தது -- 10-15 ( தேவைக்கேற்ப )
7. பெருங்காயம் -- 1 மேசைக்கரண்டி
8.  சிறிது நல்லெண்ணெய்
9.  கறிவேப்பிலை -- 1 பிடி
10. பூண்டு --  3 பல்                                                                    ( உங்கள் விருப்பம் )
11. புளி --  கோலி குண்டு அளவு                                      ( உங்கள் விருப்பம் )
12. வெல்லம் -- கோலி குண்டு அளவு                           ( உங்கள் விருப்பம் )

படிமுறைகள் :

1. முதலில் சிறிது எண்ணெயில் பூண்டையும் புளியையும் வறுக்கவும்.

2. அடுத்ததாக ஒவ்வொன்றாக உளுந்து, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, கொள்ளு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் உப்பை சேர்க்கவும்.

3. வெல்லத்தையும் கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.

4. வறுத்த அனைத்தையும் தூளாக அரைக்கவும்.

பொடி ரெடி......

  • பொடியை நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம்.
  •  இந்தப் பொடி குறைந்தபட்சம் 6 மாதம் நன்றாக இருக்கும்.














Comments

Popular posts from this blog

புதிய இரும்பு தோசை கல்லை பழக்குவது எப்படி ?

10 நிமிடத்தில் பலவகை துவையல்