கருணை கிழங்கு மசியல்




தேவைப்படும் பொருட்கள் :

1. கருணை கிழங்கு -- 300 g
2. வெங்காயம் -- 1பெரியது
3.  பூண்டு --  5 பல்
4. காய்ந்த மிளகாய் 3
5.  புளி -- சிறிதளவு
6. தக்காளி -- 1
7. கறிவேப்பிலை -- 10
8. கடுகு -- அரை தேக்கரண்டி
9. உளுந்து -- 1 தேக்கரண்டி
10. பெருங்காயத்தூள் -- அரை தேக்கரண்டி
11.எண்ணெய் -- 2 குழிக்கரண்டி
12. மஞ்சள் தூள் -- அரை தேக்கரண்டி

படிமுறைகள் :

1. கிழங்கை அவித்து தோலை உரித்து வைத்து மசித்து ( பிணைந்து )
வைக்கவும்.
2. சிறிது உப்பு போட்டு புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும்.

3. முதலில் எண்ணெய் 2 குழிக்கரண்டிகள் போட்டு , பிறகு ஒவ்வொன்றாக கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட வேண்டும்.

4. எல்லாம் போட்டு வதக்கியவுடன் இறுதியாக புளி சேர்த்து மசித்து வைத்திருந்த கருணைக்கிழங்கை வேண்டும் .

  • தேவைப்பட்டால் எண்ணெய் ஊற்ற வேண்டும்

 5. சட்டியில் கருணைக்கிழங்கு ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம்.

இனி மசியலை ருசிக்கலாம் !!!!!!!!!!!
 

                                                                                                      இப்படிக்கு ,                                                                                                             
                                                                                                      தெய்வானை கனகசபை

Comments

Popular posts from this blog

புதிய இரும்பு தோசை கல்லை பழக்குவது எப்படி ?

அதிரடி பொடி ( இட்லி , தோசை )

10 நிமிடத்தில் பலவகை துவையல்