படையாக அடை (தோசை)



தேவைப்படும் பொருட்கள் :

1. புழுங்கல் அரிசி --150 g
2. சிறு தானிய வகை ( கம்பு, தினை, வரகு, குதிரை வாலி ஏதேனும் ஒன்று ) -- 150 g
3. உளுந்து -- 100 g
4. கடலைப்பருப்பு -- 50 g
5. துவரம்பருப்பு -- 50 g
6. பாசிப்பருப்பு -- 50 g
7.வெங்காயம் -- 100 g ( வெட்டிக் கொள்ளவும் )
8. மல்லித்தழை ( வெட்டிக் கொள்ளவும் )
9. கறிவேப்பிலை  ( தூள் செய்யவும் )
10.காய்ந்த மிளகாய்  ( தூள் செய்யவும் )
11.சோம்பு -- 1 மேசைக்கரண்டி ( தூள் செய்யவும் )

 படிமுறைகள் :

1. பருப்பு அரிசி வகைகளை முக்கால் மணி நேரம் ஊறவைக்கவும். பின் அதனை மாவாக அரைக்க வேண்டும்.
2. வெட்டிய வெங்காயத்தை வதக்க வேண்டும்.
3. அந்த மாவில் வதக்கிய வெங்காயம், வெட்டிய மல்லித்தழை , தூள் செய்த காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
4.  ருசிக்கு உப்பு சேர்க்க வேண்டும்.
5. இட்டிலி மாவு பதத்திற்கு வைத்துக்கொண்டு அடையாக ஊற்றவும். எண்ணெய் ஊற்றி வெந்தவுடன் எடுக்கவும்.


  •  குறிப்பு : மல்லித்தழையை தவிர்த்து முருங்கைக் கீரை, தூதுவளை போன்ற பல வகை கீரைகளிலும் மூலிகை இலைகளிலும் ஏதேனும் ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம்
  • நிறைய சத்துக்கள் படையாக அடையில் இருப்பதால் அடை ஒரு சிறந்த காலை உணவு.
  • அடையை விருப்பப்பட்டால் சட்னியுடன் சாப்பிடலாம்.


  • ஆனால் அடையை பொடியுடன் சாப்பிட்டால் தான் மிகவும் சுவையாக இருக்கும் அடுத்ததாக போடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.......


Comments

Popular posts from this blog

புதிய இரும்பு தோசை கல்லை பழக்குவது எப்படி ?

அதிரடி பொடி ( இட்லி , தோசை )

10 நிமிடத்தில் பலவகை துவையல்