10 நிமிடத்தில் பலவகை துவையல்
இந்தப் பதிவில் துவையல் சிறிது நேரத்தில் எப்படி செய்வது இன்று பார்ப்போம் . உதாரணத்திற்கு முதலில் வல்லாரை துவையல் செய்வோம்.
தேவைப்படும் பொருட்கள் :
1.கடுகு ------தேக்கரண்டி
2. உளுந்து------1 மேசைக்கரண்டி
3.பெருங்காயத்தூள்-------1/2 தேக்கரண்டி
4. பூண்டு-----4 பல்
5. பெரிய வெங்காயம்-------எலுமிச்சம்பழம் அளவு
6. மிளகாய் ( பச்சை/ சிவப்பு/ காய்ந்தது )-----2/3
7. புளி------எலுமிச்சம் பழத்தின் பாதி அளவு
8. இஞ்சி-----1 cm
9. வல்லாரை -----கைப்பிடி அளவு
10. உப்பு---- தேவையான அளவு
11. தேங்காய் பூ----- 35 gram / கடலை பருப்பு
12. எண்ணெய்-----1 மேசைக்கரண்டி
படிமுறைகள் :
1. முதலில் கடுகு உளுந்து மற்றும் பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.
2. அடுத்தது ஒவ்வொன்றாக பூண்டு , வெங்காயம், மிளகாய் மற்றும் இஞ்சியைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
3. வல்லாரையை போட்டு வதக்கி சிறிது உப்பு சேர்க்கவும்
4. இறுதியாக தேங்காய் பூ சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.

- தேங்காய் பூ வேண்டாதவர்கள் தாளிக்கும்போது கடலைப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
5. அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து விட்டால் துவையல் தயார்.
- வல்லாரை தவிர சேர்க்கக் கூடியது :
1.கொத்தமல்லி
2. புதினா
3. கறிவேப்பிலை
4. வறுத்த கொள்ளு
5. தூதுவளை
6. முடக்கத்தான்
7. பிரண்டை
8. நெல்லிக்காய்
8. நெல்லிக்காய்
- கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை இது மூன்றையும் வதக்காமல் இதில் சேர்த்துக் கொள்ளலாம்..
இவ்வாறு பலவகை துவையல் 10 நிமிடத்தில் தயார்.
இப்படிக்கு,
தெய்வானை கனகசபை
Comments
Post a Comment