புதிய இரும்பு தோசை கல்லை பழக்குவது எப்படி ?
தேவைப்படும் பொருட்கள் :
1. வடிக்கஞ்சி
2. தேங்காய் பூ
3. முட்டை
4. நல்லெண்ணெய்
A. 1 படி ( Step )
1. புதிய இரும்பு தோசை கல்லை ஒருநாள் முழுவதும் வடிகஞ்சியில் முக்கி வைத்திருக்க வேண்டும்.
2. பின்பு தோசை கல்லை முன்னும் பின்னுமாக தேய்த்து சுத்தமாக கழுவ வேண்டும்
- இவ்வாறு 3 முறை புதிய வடிகஞ்சிகளில் ஒருநாள் முழுவதும் முக்கி வைத்திருந்து பின் சோப்பு போட்டு நாரால் கழுவ வேண்டும்.
B. 2 படி
1. தோசை கல்லை மிதமான அடுப்பில் வைத்து தேங்காய் பூவை முழுவதுமாக பரப்பி வதக்க வேண்டும். ( சிவக்கும் வரை கருக்க கூடாது )
- இவ்வாறு காலை மாலையாக 4 முறை செய்ய வேண்டும்.
- தோசை கல்லை சோப்பு போடாமல் வெறும் நாரில் (scrub) தேய்த்து கழுவ வேண்டும்
C. 3 படி
1. முட்டையை பரவலாக அடையாக ஊற்ற வேண்டும்.
2. ஓரங்களில் சுற்றி சொட்டு சொட்டாக எண்ணெய் ஊற்றி முட்டையை திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.
- இவ்வாறு 2 முறை செய்ய வேண்டும்
- பின் சோப்பை பயன்படுத்தி கையால் தேய்த்து கழுவ வேண்டும்.
- முட்டை போட்டு சாப்பிடும் அளவிற்கு கல் தயாராகிவிட்டது //////
D. 4 படி
1. தோசை ஊற்றும் முன் எண்ணெய் துணியால் கல்லை தேய்த்துவிட்டு வெங்காயத்தை பாதியாக வெட்டி தேய்க்க வேண்டும்.
2. தோசை மாவை ஊத்தப்பம் அளவில் ஊற்றி எண்ணெய் வார்த்து
திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.
3. மாறாக தோசை மாவை சிறிது சிறிதாக அகலப்படுத்தி ஊற்ற வேண்டும்.
ஊத்தப்பம்
- தோசை ஊற்ற கல் தயாராகிவிட்டது //////
_________________________________________________________________
பின்குறிப்பு :
A. இதன் பிறகு எப்பொழுதாவது தோசைக கல் அதிக சூடாகி தோசை ஊற்ற முடியாமல் போனால்........
மீண்டும் என்னை துணியையும் வெங்காயத்தையும் தேய்க்க வேண்டும்.
அதற்கும் வரவில்லை எனில் முட்டையை அடையாக ஊற்றி எடுக்க வேண்டும்.
B. தோசை ஊற்றும் போதும் சரி, படி 1,2,3,4 செய்யும் போதும் சரி அடுப்பை மிதமான சூடு இருக்க வேண்டும்.
__________________________________________________________________________
C. இந்தோலியும் தோசைக்கல் பயன்படுத்தினால் ( indolium )
வடி கஞ்சியில் ஊற வைக்காமல் நேரடியாக தேங்காய் பூ சிவக்க வருக்கலாம்.
இப்படிக்கு,
தெய்வானை கனகசபை



Add the blogg more
ReplyDelete